சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-12-21 21:04 GMT
சேலம், 
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 34 பேர் பாதிக்கப்பட்டனர். சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 22 பேர், சேலம் ஒன்றியத்தில் 7 பேர், ஆத்தூர் பகுதியில் 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 426 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 217 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்