பச்சிளம் குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது

தாவணகெரே டவுனில் பச்சிளம் குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். அவரை, மனைவியின் குடும்பத்தினர் தர்ம-அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-12-21 20:45 GMT
சிக்கமகளூரு:

பெண் குழந்தை பிறந்ததால்...

  தாவணகெரே டவுன் அக்பர்ஹாஜா காலனியை சேர்ந்தவர் மன்சூர். இவருக்கு, மில்லத் காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மன்சூரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

  ஆனால் மன்சூர், ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை பிறந்து விட்டதாக வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இதுபற்றி அவர், மனைவியிடமும் தெரிவித்துள்ளார்.
  இதற்கிடையே மன்சூர், குழந்தையை தீர்த்து கட்ட திட்டம் திட்டியுள்ளார். அதன்படி அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது குழந்தையை தலைகீழாக பிடித்து அடித்து கொன்றுள்ளார்.

   இதையடுத்து குழந்தை உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக மனைவி-குடும்பத்தினரை, நம்ப வைத்து நாடகமாடியுள்ளார். இதனால் சோகத்தில் மூழ்கிய மனைவி-குடும்பத்தினர் இறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்தனர்.

தந்தை கைது

  இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு பெண் குழந்தை பிறந்ததால் மன்சூர் அடித்து கொன்றது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், வீட்டிற்கு வந்து மன்சூரிடம் தகராறு செய்தனர். இதனை மன்சூரின் அண்ணன் மைனுதீன் தட்டிகேட்டுள்ளார். 

இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த மனைவியின் குடும்பத்தினர், அப்பகுதி மக்களும் சேர்ந்து மன்சூர், அவரது அண்ணன் மைனுதீனுக்கு தர்ம-அடி கொடுத்தனர். பின்னர் தாவணகெரே டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மன்சூரையும், அவரது அண்ணன் மைனுதீனையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். பெண் குழந்தை பிறந்ததால் அதனை தந்தையான மன்சூர் அடித்து கொன்ற சம்பவம் 3 மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தசம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்