தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-12-21 20:44 GMT
ஆபத்தான மின்கம்பம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் சின்ன சீரகாபாடி சிற்றூர் கணபதி நகரில் சாலையில் விழும் நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு விடும் என்று பலமுறை வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் கூறியும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஆபத்தான இந்த மின்கம்பத்தை அகற்ற மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணபதிநகர் பொதுமக்கள், சின்ன சீரகாபாடி. சேலம்.

உழவர் சந்தையில் விலை நிர்ணயம்
கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களின் விலைகளில் குளறுபடி உள்ளது. அதாவது வெளிமார்க்கெட்டில் என்ன விலை உள்ளதோ, அதே விலைதான் இங்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே வேளாண் அதிகாரிகள் உழவர் சந்தையில் ஆய்வு செய்து சரியான விலைைய நிர்ணயம் செய்ய 
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்துரு, கிருஷ்ணகிரி.

பயன்பாடு இல்லாத தண்ணீர் தொட்டி 
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தாலுகா கம்மம்பட்டி கிராமம் முத்துபூசாரியூர் பகுதியில் ஜம்பு (தண்ணீர் தேக்கி வைக்கும் தொட்டி) அமைக்கப்பட்டது. இந்த தொட்டி கட்டப்பட்டு 9 ஆண்டுகளாகிறது. இதுவரை பயன்பாடு இல்லாமல் உள்ளது. எனவே இந்த தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.செல்வகுமார், கம்மம்பட்டி, தர்மபுரி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் வ.உ.சி. மார்க்கெட் சீரமைக்கப்பட்டதால் பஜார், தெரு, பட்டைக்கோவில், வள்ளுவர் சிலை, தேர்வீதி ஆகிய பகுதிகளில் அன்றாடம் காய்கறிகள் விற்பனை நடந்து வருகிறது. காலை 10 மணிக்கு விற்பனை முடிந்த பிறகு அந்த பகுதியில் ஆங்காங்கே விற்பனைக்கு வைத்திருக்கும் பொருட்கள் அழுகி அப்படியே கிடக்கிறது. குறிப்பாக சில இடங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பல்வேறு நோய்கள் பரவும்் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்துள்ள குப்பைகளை தினமும் அள்ள செய்ய வேண்டும்.
ஜி.வேலாயுதம், அம்மாபேட்டை, சேலம்.
நாமக்கல் மாவட்டம் முத்துகாபட்டி கிராமத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. 2 வாரங்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறாததால் குப்பைத்தொட்டிகள் நிரம்பி அதன் அருகிலேயே குப்பைகள் கொட்டப்படுகிறது. எனவே துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார கேடு ஏற்படும் முன் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், முத்துகாபட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்