வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி
மருதகுளம் அருகே வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலியாகின.
நாங்குநேரி:
மருதகுளம் அருகே உள்ள ஆழ்வாநேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பனையன்குளம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 40 ஆடுகளை 2 வெறி நாய்கள் கடித்து குதறியதில் 20 ஆடுகள் பலியாகின. மீதமுள்ள ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் கேள்விப்பட்டு உடனடியாக அங்கு சென்ற நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, ஆழ்வாநேரி பஞ்சாயத்து தலைவர் சீனிதாஸ் ஆகியோர் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி உடனடியாக அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினர். மூலைக்கரைப்பட்டி நகர செயலாளர் முருகையா, மாணவரணி காரங்காடு மாயகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.