மோட்டார் சைக்கிள் மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலி

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலியானார்.

Update: 2021-12-21 19:12 GMT
காரியாபட்டி, 
அருப்புக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 50). இவர் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பணி நிமித்தமாக காரியாபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கு சென்று விட்டு பின்னர் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மாந்தோப்பு விலக்கு அருகே திரும்பும்போது பின்னால் மதுரை கன்னி தெருவை சேர்ந்த ராமர் (35) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள், சுரேஷ் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில்  பலத்த காயம் அடைந்த சுரேஷ்  மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்