தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

விருதுநகர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-21 19:07 GMT
விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள கூரைக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). கட்டிட தொழிலாளியான இவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தினர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த சதீஷ்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி இவரது தந்தை முத்தையா (62) கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்