பெண்ணை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள்

பெண்ணை தாக்கிய முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர்

Update: 2021-12-21 18:54 GMT
மணமேல்குடி
மணமேல்குடியை அடுத்த காரக்கோட்டை அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயஸ்ரீ(வயது 20). இவர், நேற்று இரவு 7 மணி அளவில் தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இருந்து முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் ஓடிவந்து ஜெயஸ்ரீ அணிந்திருந்த தாலிச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.
 இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தாலிச் சங்கிலியை கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டார். மேலும், கொள்ளையரிடம் இருந்து தப்பிப்பதற்காக கத்தியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஜெயஸ்ரீயை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
இதில், படுகாயமடைந்த ஜெயஸ்ரீ மணமேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மணமேல்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகமூடி கொள்ளையர்கள் பெண்ணை தாக்கி தாலிச்சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்