பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு
பஸ்சில் மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு
காட்பாடி
காட்பாடி முத்தியால்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா (வயது 75). இவர் காட்பாடியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தன்னுடைய 10 பவுன் நகையை அடமானம் வைத்திருந்தார். அந்த நகையை நேற்று பணம் கட்டி மீட்டார். பின்னர் நகையை பையில் வைத்துக்கொண்டு காந்திநகரில் இருந்து டவுன் பஸ்சில் காட்பாடி நோக்கி சென்றார்.
இறங்கும் முன் பையை பார்த்தபோது பையில் வைத்திருந்த 10 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.