கல்வராயன்மலையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் ‌40 நாட்களுக்கு பிறகு எலும்பு கூடாக மீட்பு

கல்வராயன்மலையில் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவன் 40 நாட்களுக்கு பிறகு எலும்பு கூடாக மீ்ட்கப்பட்டான்

Update: 2021-12-21 17:34 GMT
கச்சிராயப்பாளையம்

மாணவன்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் சுரேஷ்(வயது 12). இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு வடித்து வந்தான். சம்பவத்தன்று சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், பூமிநாதன் ஆகியோருடன்  மோட்டார் சைக்கிளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள சிறுகலூர் நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்தார். அப்போது சதீஷ், பூமிநாதன் இருவரும் நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டிருந்தனர். சுரேஷ் கரையில் நின்று வேடிக்கை பார்த்தான்.

எலும்பு கூடு

சில நிமிடங்களுக்கு பிறகு சுரேசும் குளிப்பதற்காக நீர் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பாறையில் வழுக்கி விழுந்த சுரேஷ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அவனை தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மோட்டாம்பட்டிக்கும் கூடலூருக்கும் இடையே உள்ள மணிமுக்தாற்றின் கரையோரம் பாறையை ஒட்டி நின்ற மரக்கிளையில் சிறுவனின் எலும்பு கூடு ஒன்று சிக்கி இருந்ததை பொதுமக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

40 நாட்களுக்கு பிறகு

உடனே கரியலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மரக்கிளையில் சிக்கிய எலும்பு கூட்டுடன் கிடந்த சட்டை மற்றும் பேண்டை அடையாளமாக வைத்து அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சுரேஷ் என்பது தெரியவந்தது. பின்னர் சிறுவனின் எலும்பு கூட்டை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கல்வராயன்மலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் 40 நாட்களுக்கு பிறகு எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்