அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

Update: 2021-12-21 17:18 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே உள்ள அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 59). இவரும் இவருடைய நண்பரான, திமிரி அருகே உள்ள செங்கணாவரம் பகுதியை சேர்ந்த வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவருமான ராஜசேகரன் என்பவரும் சேர்ந்து சோளிங்கர் பகுதியை சேர்ந்த மனோகர் என்பவரிடம் வருவாய்த்துறையில் உதவியாளர் பணி வாங்கித்தருவதாக கூறி, கடந்த 2019-ம் ஆண்டு ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து மனோகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று குணசேகரனை கைது செய்தனர். விசாரணையில் இதேபோல் பல பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற பல்வேறு வழக்கிலும் இவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. ராஜசேகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இவர் பல பேரிடம் பணம் பெற்று ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்