காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள போளிப்பாக்கம் கிராமம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ஜீவா (வயது 26).
நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள படுக்கை அறையில் ஜீவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜீவாவின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில் பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.