விசாரணை கைதி திடீர் தற்கொலை

விசாரணை கைதி திடீர் தற்கொலை

Update: 2021-12-21 16:50 GMT

கோவை

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதி திடீரென தற்கொலை செய்துகொண்டார். .

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

விசாரணை கைதி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே கொல்லம் வயல் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் தம்பி  (வயது 47). இவருடைய மனைவி ராதா (42). 

இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த மார்ச் மாதம் தம்பி தனது மனைவி ராதாவை கட்டையால் தாக்கி கொலை செய்தார்.


இதுகுறித்து எருமாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை கைதுசெய்தனர். 

அவர் ஆரம்பத்தில் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தம்பி தற்கொலை செய்வதற்காக அங்கு இருந்த ஒரு மரத்தில் தனது லுங்கியில் தூக்குபோட்டு தொங்கினார்.

இதைப்பார்த்த சக கைதிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து சிறை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த சிறை காவலர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தம்பியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து தெரியவில்லை.

 தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கோவை அரசு ஆஸ்பத்திரியில் விசாரணை கைதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்