கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுகிறதா? என உரக்கடை, கிடங்குகளில் கண்காணிப்பு குழு ஆய்வு

தனியார் உரக்கடைகள், கிடங்குகளில் பொட்டாஷ் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? என கண்காணிப்பு குழுவினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.;

Update: 2021-12-21 16:44 GMT
கிருஷ்ணகிரி:
அதிகாரிகள் ஆய்வு 
பொட்டாஷ் உரத்தின் விற்பனை விலை டிசம்பர் 8-ந் தேதி முதல் ரூ.1,040-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
ஆனால் இருப்பில் உள்ள பழைய பொட்டாஷ் உரத்தை, புதிய விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் தாசில்தார் அளவிலான வருவாய்த்துறை அலுவலர்களை கொண்டு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் உர கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தகவல் பலகை
கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், அஞ்செட்டி ஆகிய தாலுகாக்களில் ஆய்வு மேற்கொண்ட இந்த குழுவினர், கூடுதல் விலைக்கு பொட்டாஷ் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா?, உரங்களின் விலை, இருப்பு விவரங்கள் அடங்கி தகவல் பலகை பராமரிக்கப்படுகிறதா?, விற்பனை முனைய கருவியின் இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உரக்கட்டுப்பாடு சட்டம் 1985-க்கு உட்பட்டு உரங்கள் விற்பனை மேற்கொள்ள வேண்டும் என உர விற்பனையாளர்களுக்கு குழுவினர் அப்போது அறிவுறுத்தினர்.

மேலும் செய்திகள்