40 லட்சம் இழப்பீடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி

40 லட்சம் இழப்பீடு வழங்காததால் 4 அரசு பஸ்கள் ஜப்தி

Update: 2021-12-21 16:44 GMT

கோவை

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் குருபிரசாத் (வயது22). இவர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கல்வீரம்பாளையம் பகுதியில் சென்ற போது அரசு பஸ் மோதியது. 

இந்த விபத்துகடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி நடந்தது. இதில் குருபிரசாத்தின் வலதுகால் துண்டிக்கப்பட்டது. 

அவரது நண்பர் பலியானார். கால் துண்டிக்கப்பட்ட குருபிரசாத்தின் தந்தை ராஜேந்திரன், கோவை மோட்டார் வாகன விபத்து கோர்ட்டில் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தார்.

அதை விசாரித்த நீதிபதி, ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீட்டு தொகையை வழங்கவில்லை. 

எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற கோரும் மனுவை ராஜேந்திரன் தாக்கல் செய்தார். அதை  விசாரித்த நீதிபதி, 4 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து காந்திபுரம் பஸ்நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ரூட் எண் 96 பஸ்கள்-2, 91 பி பஸ், 115ஏ பஸ் ஆகிய 4 பஸ்களை ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினர்.

மேலும் செய்திகள்