27 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்

27 பள்ளிகளில் ஆபத்தான கட்டிடங்கள் இடிக்கும் பணி தொடக்கம்

Update: 2021-12-21 16:37 GMT
நெகமம்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 27 பள்ளி கட்டிடங்கள் ஆபத்தானவை என கண்டறியப்பட்டு 3  கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடைபெற்ற ஆய்வில் 9 பள்ளி கட்டிடங்கள், 11 பள்ளி வளாக பொதுக்கழிப்பிடங்கள், 2 பள்ளி சுற்றுச்சுவர்கள், 5 சமையல் கூடங்கள் என மொத்தம் 27 கட்டிடங்கள் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின்படி முதல்கட்டமாக பனப்பட்டி, வடசித்தூரில் உள்ள ஆபத்தான கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணி தொடங்கியது. தொடர்ந்து மீதமுள்ள ஆபத்தான கட்டிடங்களும் இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்