லாரியில் கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

லாரியில் கற்கள் கடத்திய 2 பேர் மீது வழக்கு

Update: 2021-12-21 16:37 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சாமியாண்டிபுதூரில் தாலுகா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கற்களை ஏற்றி வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கற்களுடன் 2 லாரிகளையும் போலீசார் வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் கேரளாவுக்கு கற்கள் கடத்தியதாக பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 40), சித்தூரை சேர்ந்த பாஜிஸ் (42) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்