ரிஷிவந்தியத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
ரிஷிவந்தியத்தில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் ஆகியோர் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெருமாள் கோவில் தெருவில் அர்ரகுமான் என்பவரின் மளிகை கடையில் 795 புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அர்ரகுமானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்கு வருவாய்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.