செம்மாண்டப்பட்டி ஏரியின் மதகை மர்மநபர்கள் திறந்து விட்டதால் பரபரப்பு

செம்மாண்டப்பட்டி ஏரியின் மதகை மர்மநபர்கள் திறந்து விட்டதால் பரபரப்பு

Update: 2021-12-21 16:17 GMT
வெண்ணந்தூர், டிச.22-
செம்மாண்டப்பட்டி ஏரியின் மதகை மர்மநபர்கள் திறந்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஏரி தண்ணீர், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
செம்மாண்டப்பட்டி ஏரி
நாமக்கல் மாவட்டம் செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது செம்மாண்டப்பட்டி ஏரி. 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு வெண்ணந்தூர் பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும்.
செம்மாண்டப்பட்டி ஏரி நிரம்பி, ஓ.சவுதாபுரம் பகுதியில் உள்ள சேமூர் ஏரிக்கு செல்வது வழக்கம். தற்போது பெய்துள்ள மழையால் செம்மாண்டப்பட்டி ஏரி நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பரபரப்பு
இந்த ஏரியில் இருந்து சேமூர் ஏரிக்கு செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதற்கிடையே இந்த ஏரியில் இருந்து மதகை மர்மநபர்கள் திறந்து விட்டுள்ளனர். இதனால் கால்வாயில் தண்ணீர் செல்ல முடியாமல், அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏரி தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த கால்வாயை போர்க்கால அடிப்படையில் உடனே தூர்வாரி சேமூர் ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தண்ணீரால் மூழ்கிய விவசாய பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்