மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்து சிறுவன் சாவு

பெரணமல்லூர் அருகே மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-12-21 15:55 GMT
சேத்துப்பட்டு

பெரணமல்லூர் அருகே மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி அருகே அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் தினேஷ் (வயது 12). 

இந்த நிலையில் இன்று காலை அருணாசலம் மற்றும் தினேஷ் ஆகியோர் ஆவணியாபுரம் ஆற்றில் இருந்து தனது வீட்டு தேவைக்காக மாட்டு வண்டியில் மணல் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். 

பெரணமல்லூர் அருகே வந்தபோது தினேஷ் மாட்டு வண்டியின் மேல் இருந்து கீழே இறங்கும் போது திடீரென தவறி கீழே விழுந்தான். 

இதில் மாட்டு வண்டி சக்கரத்தில் சிக்கி கொண்டான். உடனடியாக படுகாயமடைந்த தினேசை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

மேலும் செய்திகள்