இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் சாகுல்ஹமீது, பக்கிரிசாமி, காரல்மாக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் செல்வம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும்.திருப்பூண்டி காரைநகர் பகுதியில் அமைந்துள்ள மயானத்திற்கு செல்லும் சாலையை சீர் செய்து தார்ச்சாலையாக மாற்றவோண்டும். திருப்பூண்டி மலாக்கா பள்ளி தெருவில் உள்ள குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்து தரவேண்டும். திருப்பூண்டி கடைத்தெருவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பொது கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பன.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டன