கோவை
தமிழகத்தில் ‘கள்' இறக்கி விற்பனை செய்ய உள்ள தடையை நீக்க கோரி 234 எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் அனுப்ப கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையில் விவசாயிகள் கோவை மத்திய தபால் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் அனுப்பினர்.
இதையடுத்து நல்லசாமி கூறுகையில், கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்த உணவு தேடும் உரிமை ஆகும். ‘கள்' போதைபொருள் என்று நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும்.
ஜனவரி 21-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் ‘கள்' இறக்கி சந்தைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. எங்கள் கோரிக்கை நியாயம் என்றால் ஆதரவு அளிக்கட்டும். இல்லை எனில் வாதாட வரட்டும் என்றார்.