தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் நடைபெற்றது.

Update: 2021-12-21 13:56 GMT
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரை அடுத்த காக்களூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பால்வளத்துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார். 

பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் தேசிங்கு, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ், கிளை கழக செயலாளர் காக்களூர் ராஜ்குமார் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்