நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

Update: 2021-12-21 13:21 GMT
தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு 2020 21 ஆம் ஆண்டுக்கான குடிமக்கள் நுகர்வோர் சங்கம் மற்றும் முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை இணைந்து நடத்திய நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு திருப்பூர் குமரன் கல்லூரியில் நடைபெற்றது. கருத்தரங்கில் முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வரவேற்புரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் முருகன் கலந்துகொண்டு தேசிய நுகர்வோர் தின விழாவின் முக்கியத்துவத்தையும் பொருட்கள் வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டிய விபரங்களை பற்றியும் உரையாற்றினார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை உணவு பாதுகாப்பு நடவடிக்கை பற்றியும், தரமான உணவு பயன்பாடு பற்றிய கருத்தும் ரேஷன் அட்டை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு எடுத்துரைத்தார். இதில் கல்லூரி முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் குமரன் கல்லூரியில் 12 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர் தேர்தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல் போட்டிகள் நடைபெற்றது. கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, நடனக்குழு போட்டி, பாட்டுப் போட்டி, சுவரொட்டி தயாரித்தல் மற்றும் ஒரு வரி விளக்கம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் ராஜ்குமார், மற்றும் துணை வட்டாட்சியர் பாண்டீஸ்வரி ஆகியோர் பரிசளித்தனர். இதில் கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் கல்லூரி மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்