வறுகடலை ஆலைக்குள் புகுந்த பாம்பு
போடியில் வறுகடலை ஆலைக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அதனை தீயணைப்பு படைவீரர்கள் உயிருடன் பிடித்தனர்.
போடி:
போடி கருப்பசாமி கோவில் தெருவில் வாசு என்பவருக்கு சொந்தமான வறுகடலை தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று மதியம் 1 மணி அளவில் பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட ஊழியர்கள் பதறியடித்து வெளியே ஓடினர். இது குறித்து உடனடியாக போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். அது சுமார் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஆகும். அந்த பாம்பை போடி பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.