மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

Update: 2021-12-21 12:13 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடந்தது. 

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு புதிய அடையாள அட்டை பெறவும், பழைய அடையாள அட்டையை புதுப்பிக்கவும், அடையாள அட்டையை தொலைத்தவர்கள் மீண்டும் அடையாள அட்டை பெறவும் விண்ணப்பித்தனர். 

அவர்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளின் படி புதிய அடையாள அட்டை வழங்க அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்