காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
காரணைப்புதுச்சேரி கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி லட்சுமி கணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 55). இவர் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். இதனையடுத்து நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3½ பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பழனி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.