அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பெட்டகம்
ஓட்டப்பிடாரம் அருகே சித்தா மருத்துவத்துறை சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பெட்டகம் வழங்கப்பட்டது
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில், தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ துறை சார்பில் சித்தா தின விழா, சித்த மருத்துவ கண்காட்சி மற்றும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பெட்டகம் வழங்கும் விழா யூனியன் கூட்ட அரங்கில் நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி தலைமை தாங்கி மருத்துவ கண்காட்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் பெட்டகம் வழங்கினார். வளர்ச்சித்திட்ட அலுவலர் காயத்ரி முன்னிலை வகித்தார். ஓட்டப்பிடாரம் சித்த மருத்துவர் வசந்தகுமாரி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் யூனியன் அலுவலர் வெங்கடாச்சலம், அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் ஜோசெரில், சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கரநாராயணன், மல்லிகா, உமாசங்கரி, ஸ்ரீதேவி, யோகா மருத்துவர் செல்வி மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். மருத்துவ அலுவலர் சேவியர் மைக்கேல்ராஜ் நன்றி கூறினார்.