நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் முற்றுகை போராட்டம்
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பாஜக வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார்.
வடக்கு மாவட்ட தலைவர் சாசா வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் முத்துசாமி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.
மார்கழி மாதம் பக்தர்கள் எழுந்து கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக நகராட்சி சங்கு ஒலிக்கச்செய்ய வேண்டும், வந்தவாசி பஜாரில் குண்டும் குழியுமாக உள்ள பிரதான சாலையை சீரமைக்க வேண்டும், மயான பாதைகளை புனரமைக்க வேண்டும்
கடைவீதி உள்ளிட்ட தெருக்களில் பொதுமக்களுக்கும், வியபாரிகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ள மாடுகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், புதிய பஸ்நிலையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்,
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையர் பிரீத்தி, அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன், செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.