கடல் உணவுப்பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் உணவுப்பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி நடந்தது

Update: 2021-12-21 11:57 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், தொழில ்முனைவோர் மேம்பாட்டு ஆணையத்தின் நிதி உதவியிடன், கடல்சார் உணவுப்பொருள் வணிக மையத்தின் மூலம் கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் குறித்த பயிற்சி நடந்தது. பயிற்சியை கல்லூரி முதல்வர் (பொறுப்பு), சுஜாத்குமார் தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவிப்பேராசிரியர் கணேசன் வரவேற்று பேசினார். மீன்வள விரிவாக்கம், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறைத் தலைவர் சாந்தகுமார், நாகர்கோவில் செயின்ட் சேவியர் கத்தோலிக் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் எஸ்.டி.செரிபா ஆகியோர் பேசினர்.
பயிற்சியில் செயின்ட் சேவியர் கத்தோலிக்று பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 114 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவு விழாவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
-

மேலும் செய்திகள்