மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

தூசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-21 11:56 GMT
தூசி

தூசி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் அலெக்ஸ் (வயது 25). 

செய்யாறு சிப்காட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (23) என்ற மனைவியும், ஒரு வயதில் ஷர்மிதா என்ற குழந்தையும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு ஷிப்ட் வேலை முடித்துவிட்டு அலெக்ஸ் மோட்டார்சைக்கிளில் இரவு 11.30 மணிக்கு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

தூசி அருகே புதுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அலெக்ஸ் தலையில் படுகாயமடைந்து காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்