சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 219 நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருது

சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளுக்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2021-12-21 08:34 GMT
மெப்ஸ் சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டு கமிஷனர் எம்.கே.சண்முகசுந்தரம் வரவேற்றார்.விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு ஏற்றுமதியில் சிறப்பாக செயல்பட்ட 219 நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகளை வழங்கினார். 

பின்னர் கவர்னர் பேசும்போது, “நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு கொரோனாவால் கடுமையான பாதிப்புகளை சந்தித்தோம். கொரோனா இன்னும் ஓயவில்லை. ஒமைக்ரான் பயமுறுத்தி கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி போடவேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்கவேண்டும்” என்றார்.

விழாவில் டிட்கோ நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்