ஆத்தூர் அருகே மான்கறி வைத்திருந்த வாலிபர் சிக்கினார் 20 கிலோ கறி பறிமுதல்
ஆத்தூர் அருகே மான்கறி வைத்திருந்த வாலிபர் சிக்கினார். அவரிடம் இருந்து 20 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆத்தூர்
ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சேலம்-ஆத்தூர் புறவழிச்சாலையில் 2 பேர் ஒரு சாக்குமூட்டையுடன் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். சாக்குமூட்டையுடன் நின்ற மற்றொரு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து பையை சோதனையிட்டனர்.
அதில் 20 கிலோ மான்கறி இருந்தது. மேலும் பிடிபட்டவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரது மகன் ரவி (வயது 27) என்பதும், தப்பி ஓடியவர் புளியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரவியையும், மான்கறியையும் ஆத்தூர் வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர் வனத்துறையினர் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.