சேலம் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 45 பேர் ‘டிஸ்சார்ஜ்’
சேலம் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 45 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 34 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று புதிதாக 33 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 13 பேர், சங்ககிரியில் 7 பேர், கொங்கணாபுரத்தில் 2 பேர், அயோத்தியாப்பட்டணம், பனமரத்துப்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சேலம் மாவட்டத்துக்கு நாமக்கல்லில் இருந்து வந்த 4 பேருக்கும், ஈரோடு மற்றும் திருச்சியில் இருந்து வந்த தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 45 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த 87 வயதான முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,723 ஆக அதிகரித்துள்ளது.