கல்லக்குடியில் ரெயில் மோதி நர்சிங் மாணவி பலி
கல்லக்குடியில் ரெயில் மோதி நர்சிங் மாணவி பலியானார்.
கல்லக்குடி, டிச.21-
கல்லக்குடியில் ரெயில் மோதி நர்சிங் மாணவி பலியானார்.
நர்சிங் மாணவி
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் தனுஷியா (வயது 19). இவர் கல்லக்குடியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து, அங்குள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். மேலும் அவருடன் 2 மாணவிகள் தங்கி இருந்தனர்.
இந்நிலையில் தனுஷிகா கடந்த வாரம் விடுமுறையில் ஊருக்குச் சென்றுள்ளார். ேநற்று முன்தினம் மதியம் தனுஷிகாவை மீண்டும் அவரது தந்தை ரவிச்சந்திரன் கல்லக்குடிக்கு பஸ் ஏற்றி வைத்தார். ஆனால் தனுஷிகா கல்லக்குடியில் உள்ள அவரது வாடகை வீட்டிற்கு தாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால் அவரை பெற்றோர் திட்டினராம். இந்த நிலையில் மனம் உடைந்த அவர் கல்லக்குடி-முதுவத்தூர் சாலை அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் போனில் பேசியபடி நடந்து சென்றார்.
அப்போது, அந்த வழியாக வந்த அதிவேக ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருதாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.