திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சமயபுரம், டிச.21-
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா தொற்று
உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வரும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளை சேர்ந்த 4 மாணவர்கள் உள்பட மொத்தம் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் காய்ச்சலால் இந்த மாணவர்கள் அவதி அடைந்து வந்தனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பள்ளியில் ஆசிரியர்கள், மற்ற மாணவ-மாணவிகள், விடுதி மாணவர்கள் என சுமார் 6 ஆயிரம் பேருக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு, பள்ளி வளாகம், விடுதியை கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவி
இதேபோல் திருச்சியை அடுத்த குழுமணி அருகே உள்ள ஏகிரிமங்களம் குடிதெருவை சேர்ந்த மாணவி ஒருவர் சீராத்தோப்பு ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைதொடர்ந்து சீராத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட 167 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி, பள்ளி வளாகம் முழுவதும் தெளிக்கப்பட்டது.