கூடுதல் பஸ் இயக்க கோரி கிராம மக்கள் போராட்டம்
நரிக்குடி அருகே கூடுதல் பஸ் இயக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே கூடுதல் பஸ் இயக்க கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் மறியல்
காரியாபட்டியில் இருந்து நாலூர் கிராமத்திற்கு பஸ் சென்று வருகிறது. இரவு 9.30 மணிக்கு செல்ல வேண்டிய பஸ் சில மாதங்களாக வருவதில்லை. மேலும் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி கிராம மக்கள் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் நாலூர் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பாலமுருகன் தலைமையில் பொதுமக்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த காரியாபட்டி போக்குவரத்து பணிமனையின் மேலாளர் பாலமுருகன், கட்டனூர் சப் -இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்வராஜ், தனிப் பிரிவு போலீசார் சேவியர் ராஜ், கிராம நிர்வாக அதிகாரி தென்னரசு ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை
இந்த பேச்சுவார்த்தையில் இரவு 9.30 மணிக்கு வரும் பஸ் தினமும் வந்து நாலூர் கிராமத்தில் தங்கி பின்னர் காலை செல்ல ஏற்பாடு செய்யப்படும் அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.