வார்டு மறுவரையறை கருத்துக்கேட்பு கூட்டம்

விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்ட வார்டு மறுவரையறை கருத்துக்கேட்பு கூட்டம் ஆணையத்தலைவர் பழனிகுமார் தலைமையில் நடந்தது.

Update: 2021-12-20 19:15 GMT
விருதுநகர், 
விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்ட வார்டு மறுவரையறை கருத்துக்கேட்பு கூட்டம் ஆணையத்தலைவர் பழனிகுமார் தலைமையில் நடந்தது. 
கருத்துக்கேட்பு கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளின் வரைவு வார்டு மறுவரையறை பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை, மாவட்டத்திற்குட்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களின் பரவலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.  
கூட்டத்திற்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தலைவர் டாக்டர் பழனி குமார் தலைமை தாங்கினார்.
 இக்கூட்டத்தில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய தலைவர் பழனிக்குமாரிடம் தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆட்சேபனை 
 இக்கூட்டத்தில் ஆணையத்தலைவர் கூறியதாவது:-
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சேபனைகள் கருத்துக்களை நேரடியாக தெரிவித்தனர். அவருடைய கருத்துக்களை கேட்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொதுமக்களிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. மேலும் 24-ந் தேதி வரை ஆட்சேபனைகள் கருத்துக்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளில் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து        26-ந் தேதியன்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதை ஆணையத்திற்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நகராட்சிகள் மறுவரையறைப் படுத்தியது குறித்தும் அந்தந்த கலெக்டர்கள், அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 
இந்த கூட்டத்தில் சிவகாசி மாநகராட்சி வார்டு வரையறை குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பொதுமக்களும் தங்கள் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைத்து மனுக்களும் வழங்கினர்.
மனுக்கள் 
 இதேபோன்று விருதுநகர் நகராட்சி வார்டு மறுவரையறை குறித்தும் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், வருகிற 24-ந் தேதி வரை பொதுமக்கள் வார்டு மறுவரையறை குறித்த மனுக்களை வழங்கலாம் என தெரிவித்தார்.
 இதில் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் சுந்தரவள்ளி, மறுவரையறை வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா,  கலெக்டர் மேகநாதரெட்டி, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (தேர்தல்) சம்பத் குமார், உதவி இயக்குனர் (தேர்தல்) சுந்தரமூர்த்தி, முதன்மை தேர்தல் அலுவலர் (மாநகராட்சிகள்) சுப்பிரமணியன், முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) தனலட்சுமி, அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்