காதல் திருமணம் செய்த பெண் 7 மாதத்தில் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் 7 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் 7 மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சன்னதி தெருவில் வசித்து வருபவர் கூடலிங்கம் (வயது 27). இவரது மனைவி சகானா பாத்திமா (24). நர்சிங் முடித்துள்ள இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். அடிக்கடி கூடலிங்கம் குடித்துவிட்டு வருவதால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் சகானா பாத்திமா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது தாயார் ஆஷூரா கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.