இளையான்குடி,
இளையான்குடி அருகே மேல்துறையூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் முருகேசன் (வயது55). இவர் பிராந்தமங்கலம் கால்வாயில் சட்டவிரோதமாக தனது டிராக்டரில் மணல் அள்ளி உள்ளார். அப்போது ரோந்து பணியில் இருந்த இளையான்குடி போலீசார் அவரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.