8-ம் வகுப்பு மாணவி கடத்தல்
திட்டக்குடியில் 8-ம் வகுப்பு மாணவி கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திட்டக்குடி,
திட்டக்குடி பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி, ஒரு பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு படித்து வருகிறாள். வீட்டில் இருந்த மாணவி, திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் பாடம் படிப்பதற்காக மாணவிக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். இதை பயன்படுத்தியபோது மாணவிக்கும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா ஆலங்காடு பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் சின்னராஜா(வயது 21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். திருமண ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை சின்னராஜா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சின்னராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.