கோபி கூட்டுறவு கட்டிட சங்கத்தில் முதிர்வு தொகை வழங்க கேட்டு வாடிக்கையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கோபி கூட்டுறவு கட்டிட சங்கத்தில் முதிர்வு தொகை வழங்க கேட்டு வாடிக்கையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபி கூட்டுறவு கட்டிட சங்கத்தில் முதிர்வு தொகை வழங்க கேட்டு வாடிக்கையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடிக்கையாளர்கள் போராட்டம்
கோபி வாஸ்துநகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கூட்டுறவு கட்டிட சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க அலுவலகத்துக்கு நேற்று மாலை 4 மணி அளவில் வாடிக்கையாளர்கள் சிலர் வந்தனர். பின்னர் அவர்கள் முதிர்வு தொகை வழங்க கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கி துணைபதிவாளர் சரவணன் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
முதிர்வு தொகை கேட்டு...
அப்போது வாடிக்கையாளர்கள் கூறும்போது, ‘முதிர்வு காலம் முடிந்தும் கடந்த 3½ ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படவில்லை. உடனே எங்களுக்கு முதிர்வு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர். அதற்கு அதிகாரி கூறும்போது, ‘முதிர்வு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதனை ஏற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் இரவு 7.20 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போராட்டம் காரணமாக பணி முடிந்தும் சங்க அலுவலகத்தை பூட்ட முடியாமல் ஊழியர்கள் தவித்தனர். இதனால் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.