பள்ளி மாணவி மர்ம சாவு; மலைக்கிராம மக்கள் போராட்டம்

பள்ளி மாணவி மர்ம சாவில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-20 16:58 GMT
கொடைக்கானல்:
கொடைக்கான‌ல் கீழ்மலை கிராமமான பாச்ச‌லூரில் உள்ள ப‌ள்ளி வ‌ளாக‌த்தில் க‌ட‌ந்த‌ 15-ந்தேதி மாணவி உட‌ல்க‌ருகி மர்மமான முறையில் இறந்துகிடந்தாள். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகியும், போலீசார் நடத்தி வரும் விசார‌ணையில் எந்த‌வித‌மான‌ தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கொடைக்கானல் மேல்மலையில் உள்ள கூக்கால் கிராமத்தை சேர்ந்த பொதும‌க்க‌ள் நேற்று த‌ங்க‌ளது குழ‌ந்தைக‌ளை ப‌ள்ளிக்கு அனுப்ப‌ ம‌றுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ம‌லைக்கிராம‌ங்க‌ளில் உள்ள‌ அனைத்து ப‌ள்ளிக‌ளிலும் க‌ண்காணிப்பு கேம‌ரா பொருத்த வேண்டும், ப‌ள்ளிக்கு வ‌ரும் மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய‌ வேண்டும் என்பன உள்ளிட்ட‌ கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதும‌க்க‌ள் போராட்டம் நடத்தினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) முருகன் தலைமையிலான போலீசார் மற்றும் பள்ளி ஆசிரிய‌ர்கள், போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவி சாவு வழக்கில் உரிய தீர்வு காண வேண்டும், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதைத்ெதாடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கூக்காலில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்