3 உர கடைகளின் உரிமம் ரத்து

இருப்பு குறைபாடு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் 3 உரகடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-20 16:54 GMT
சிவகங்கை, 
இருப்பு குறைபாடு காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் 3 உரகடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
பயிர் சாகுபடி
சிவகங்கை வேளாண்மை இணை இயக்குனர் வெங்க டேசுவரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 82 ஆயிரத்து 870 எக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த நெற்பயிருக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஸ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் தடையின்றி விவசாயிகளுக்கு வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்க எடுத்து வருகிறது.
மேலும் தற்போது நெற்பயிருக்கு தேவைப்படும் பொட்டாஸ் உரங்கள் அரசு நிர்ணயித்த பழைய விலை ஒரு மூடை ரூ.1040-க்கும், கடந்த 8-ந் தேதிக்கு பின்பு வரப்பெற்ற பொட்டாஸ் உரங்கள் ஒரு மூடை ரூ.1700-க்கும் விற்பனை செய்யவேண்டும் என்றும் அத்துடன் கடைகளின் முன்பு விலைபட்டியல் வைக்க வேண்டும்.
ஆய்வுக்குழு
 உரமூடைகளின் இருப்பு குறித்த பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு அறிவிப்பின் படி உரங்கன் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் வேளாண்மைத் துறை, வருவாய்த் துறை, தோட்டக்கலை துறைகள் உள்ளடங்கிய அலுவலர்களை கொண்டு ஒரு சிறப்பு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
உரிமம் ரத்து
 அந்த குழு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 60 தனியார் உரக்கடைகளில் திடீர் ஆய்வு செய்ததனர். அப்போதுஇருப்பு குறைபாடு கண்டறியப்பட்டதால் தேவகோட்டையில் 2 உரகடைகள் மற்றும் மானாமதுரை முத்தனேந்தலில் 1 உரக்கடையின் உர உரிமம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் விவசாயிகள் உர மூடையில் குறிப்பிடப்பட்டுள்ள பொட்டாஸ் உர விலை விவரத்தினை பார்த்து, அதன்படி அரசு நிர்ணயித்த விலையில் உரங்களை பெற்று பயன ்பெறலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்