பயிர் காப்பீடு செய்ய 31-ந்தேதி கடைசி நாள்

சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ராபி பருவ பயிர்களான, நிலக்கடலை, மிளகாய், பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகிற 31-ந்தேதி கடைசிநாள் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-20 16:54 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் ராபி பருவ பயிர்களான, நிலக்கடலை, மிளகாய், பயிர்களுக்கு காப்பீடு செய்ய வருகிற 31-ந்தேதி கடைசிநாள் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
குறுவட்டம்
சிவகங்கை மவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- நிலக்கடலை பயிருக்கு தேவகோட்டை கண்ணங்குடி வட்டாரத்தை தவிர மாவட் டத்தில் 10 வட்டாரத்தில் உள்ள 25 குறுவட்டங்களிலும், மற்றும் மிளகாய் பயிருக்கு இளையான்குடியில் பகுதியில் 5 குறுவட்டங்கள், காளையார்கோவில் 1 குறுவட்டம், மானாமதுரை 2 குறுவட்டங்களும், திருப்புவனம் 3 குறுவட்டங் களிலும் பயிர்க்காப்பீடு செய்வதற்கு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. 
இந்த குறுவட்டங்களில் பயிரை சாகுபடி செய்யும் விவசாயிகள் 1 ஏக்கருக்கான பிரிமியம் நிலக் கடலைக்கு ரூ.324, மிளகாய்க்கு ரூ.1,200, பொது சேவை மையம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், வங்கிகளில் அடங்கல், ஆதார், வங்கி கணக்கு முதலான ஆவணங்களுடன் வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.
ராபி பருவத்தின் இதர பயிர்களான பருத்தி மற்றும் வெங் காயம் பயிர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 31-ந் ேததி வரையும், வாழைக்கு பிப்ரவதி மாதம் 28-ந் தேதிவரையும், இப்பயிர்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ள குறுவட்டங் களில் சாகுபடி செய்யும் விவசாயிகள் உரிய காப்பீடு பிரிமியம் தொகையை ஆவணங்களுடன் செலுத்தி காப்பீடு செய்தவன் மூலம் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்து கொள்ளலாம்.
கூடுதல் விவரம்
இதுதொடர்பான கூடுதல் விவரங்களை விவசாயிகள் அந்தந்த வட்டாரங்களின் வேளாண்மை தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுகி தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்