பாம்பாற்றில் இடுப்பளவு நீரில் பிணத்தை தூக்கி சென்று புதைக்கும் அவலம்
திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஓடும் இடுப்பளவு நீரில் பிணத்தைத் தூக்கி சென்று சுடுகாட்டில் புதைத்தனர். பாலம் கட்ட வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பாம்பாற்றில் ஓடும் இடுப்பளவு நீரில் பிணத்தைத் தூக்கி சென்று சுடுகாட்டில் புதைத்தனர். பாலம் கட்ட வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மயானம்
திருப்பத்தூர் தாலுகா காக்கனாம்பாளையம், கூடப்பட்டு ஊராட்சிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். அனைத்துச் சாதியினருக்கான பொது மயானம் கூடப்பட்டு பாம்பாறு அருகில் உள்ளது.
அந்த ஊராட்களில் யாரேனும் உயிரிழந்தால் அவரின் உடலை பாம்பாற்றை கடந்து எடுத்துச் சென்று அங்குள்ள பொது மயானத்தில் தான் அடக்கம் ெசய்ய வேண்டும்.
அண்மையில் ெபய்த மழையால் பாம்பாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது இடுப்பளவு தண்ணீர் ஓடுகிறது.
அவல நிலை
இந்தநிலையில் நேற்று காக்கனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த காசியம்மாள் என்பவர் உயிரிழந்தார். அவரின் பிணத்தை மயானத்துக்கு எடுத்துச்செல்ல பாம்பாற்றில் ஓடும் இடுப்பளவு நீரில் இறங்கி கரையை கடந்து சென்று பிணத்தைப் புதைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.
பாடை கட்டி வீட்டில் இருந்து பிணத்தை எடுத்துச் சென்ற உறவினர்கள் பாம்பாற்றின் கரையில் வைத்து, ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதிக்கு தகவல் தெரிவித்தனர். அவர், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
எனினும், உடனடியாக தற்போது எதுவும் செய்ய இயலாததால் பாம்பாற்றில் ஓடும் இடுப்பளவு நீரில் பிணத்தைத் தூக்கி சென்று மயானத்தில் புதைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
பாலம் கட்ட வேண்டும்
காக்கனாம்பாளையம் ஊராட்சியில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கான பொது மயானம் கூடப்பட்டு கிராமத்தில் இருந்து 500 அடி தூரத்தில் உள்ளது. பிணத்தைப் புதைக்க அந்த மயானத்துக்கு பாம்பாற்றைக் கடந்து தான் செல்ல ேவண்டும். உடனடியாக தமிழக அரசு பாம்பாற்றைக் கடக்க பாலம் கட்டித்தர வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் தற்போது கிராமப்பகுதிகளில் பொதுவான சுடுகாடு இருந்தால் ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். அந்த நிதியை வைத்தே பாம்பாற்றின் குறுக்ேக பாலம் அமைத்துத் தர வேண்டும். இதுதான் எங்களின் நீண்டநாள் கோரிக்ைக.
இவ்வாறு அவர்கள் கூறினர்.