காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-12-20 16:23 GMT
விழுப்புரம், 

வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்தவர் மதுரை மகன் மனீஷ் (வயது 22). மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இறுதியாண்டு படித்து வந்தார். 

இவர் மரக்காணம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அந்த பெண்ணின் பெற்றோர், அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மனமுடைந்த மனீஷ், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மனீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்