மின்சாரம் தாக்கி பெண் விவசாயி சாவு
மின்சாரம் தாக்கி பெண் விவசாயி இறந்தார்.
பெருந்துறையை அடுத்துள்ள திருவாச்சி சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி பூபதி (வயது 45). விவசாயி.
நேற்றுக்காலை இவர் மாட்டுத்ெதாழுவில் உள்ள கன்றுக்குட்டியை அவிழ்த்து விட சென்று உள்ளார். கன்றுக்குட்டியை அவிழ்த்து விட்டபோது அது கயிற்றுடன் இழுத்துக்கொண்டு ஓட தொடங்கியது. இதனால் கன்றுக்குட்டியை தடுத்து நிறுத்துவதற்காக அருகில் உள்ள இரும்பு குழாயை தாங்கி பிடித்து உள்ளார். அப்போது அந்த இரும்பு குழாயின் மேல் பகுதியில் கட்டப்பட்டிருந்த மின்சார ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதை பூபதி அறியவில்லை. இதனால் இரும்பு குழாயில் கை வைத்தவுடன் பூபதியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.