தேசிய மாணவர் படை அலுவலகம் திறப்பு

மீஞ்சூர் ஸ்ரீசந்திரபிரபுஜெயின் கல்லூரியில் தேசிய மாணவர் படை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2021-12-20 14:52 GMT
இந்த விழாவுக்கு கல்லூரியின் தலைவர் நேமிசந்த்கட்டாரியா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் நாகஜோதி, கல்லூரி இணை செயலாளர் சுரேஷ்ராத்தோட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய மாணவர் படை அலுவலர் பேராசிரியர் அண.திருநெல்லை அனைவரையும் வரவேற்றார். இந்திய தரைப்படையின் மேஜர் மினிஎம் தேசிய மாணவர் படை அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் தேசிய மாணவர் படை கேப்டன் முகமதுபருக், துணை முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்