ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் நகை பறித்தவர் கைது
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் நகை பறித்தவர் கைது
கோவை
கோவை ஆவாரம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 84). ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.
சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்த போது மர்ம ஆசாமி ஒருவர், காலிங் பெல்லை அழுத்தினார்.
இதனால் சொக்கலிங்கம் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது அந்த மர்ம ஆசாமி சொக்கலிங்கம் கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து,
சொக்கலிங்கத்திடம் நகை பறித்த நியூசித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த கண்ணன் (43) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 3½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.