ஓடும் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு
வாணியம்பாடி அருகே ஓடும் ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.;
ஜோலார்பேட்டை
வாணியம்பாடி அருகே ஓடும் ரெயில் மீது கல்வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி ரப்தி சாகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நள்ளிரவு ஜோலார்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தது.
வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு ரெயில்வே மேம்பாலம் அருகில் சென்றபோது அந்த ரெயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாக கல் வீசினர்.
அதில் ரெயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமாகின.
இதுகுறித்து ஓடும் ரெயில் எஞ்சின் டிரைவர் ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான ரெயில்வே போலீசார் ‘சார்லி’ என்ற மோப்பநாய் உதவியுடன் தண்டவாளத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார், தண்டவாளத்தின் அருகில் வசிக்கும் மக்களை அழைத்து, தண்டவாளம் அருகே சிறுவர்கள் யாரும் விளையாட கூடாது,
ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு விட கூடாது, பொக்லைன் எந்திரம் எந்திரம் மூலம் ஏதேனும் பணிைய மேற்கொள்ள கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவர், என எச்சரிக்கை விடுத்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் இதே பகுதியில் சரக்கு ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீசினர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் மீண்டும் பயணிகள் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.